குடும்பக்கட்டுப்பாடு பற்றி
இஸ்லாம் குடும்ப கட்டுப்பாடு பற்றி என்ன தான் சொல்கிறது...? அது குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவதையே தடுத்திருக்கிறதா..? பகுத்தறிவு மூலம் ஒவ்வொரு செயலின் ஆரம்பம், இறுதி விளைவுகளை அடிப்படையாக கொண்டு தன் கொள்கையை விஸ்தரிக்கும் இஸ்லாம் அப்படி சொல்லவில்லை. இஸ்லாமின் பார்வையில் மக்கள் சக்தி என்பது மகத்தான சக்தி..! இறைவனின் அன்பு பரிசு. கடவுள் ஒவ்வொரு உயிரையும் இந்த உலகில் படைக்கும் போது அவரவர்களுக்கான உணவை தீர்மானித்து விட்டு தான் படைக்கிறான். எனவே அவர்களைப்பற்றிய கவலையால் அந்த உயிரையே வேண்டாம் என்று தடுப்பதை இறைவன் மிகவும் வெறுக்கிறான். அப்படி செய்பவர்கள் இறைவனுக்கு எதிரானவர்கள். அதே நேரம் முற்றும் முழுதுமாக குடும்பக்கட்டுப்பாட்டை இஸ்லாம் தடை செய்யவில்லை. அப்படி செய்வது ஏற்கக்கூடிய காரணம் அல்ல என்பதும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் இஸ்லாத்திற்கு தெரியும். உதாரணத்திற்கு மறு குழந்தை பிறப்பு என்பது தாயின் உயிரை குடித்துவிடும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் (சிசேரியன் போன்ற காரணங்களால்) அங்கே குடும்ப கட்டுப்பாட்டை இஸ்லாம் ஆதரிக்கிறது. அதுவும், கரு உருவாவதற்கு முன்பே குழந்தை உருவாவதை திட்டமிட்டு தடுத்துவிடவேண்டும். குழந்தை உண்டான பிறகு அதை அழிப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம் இஸ்லாம் விபச்சாரத்தின் மூலம் குழந்தை உருவாகி, அதை அழிக்கும் இக்கால செயலை பெருங்குற்றமாக கருதி எச்சரிக்கிறது. அதே போல் குழந்தை பிறப்பை தடுக்கும் கருத்தடை சாதனங்களை அவசியமில்லாமல் தவறான நோக்கில் பயன்படுத்துவதை இஸ்லாம் கண்டிப்பதன் மூலம் அங்கும் விபச்சாரத்திற்கு எதிரான தன் சாட்டையை சொடுக்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இறைவன் மனிதர்களுக்கு அனுமதி அளித்த நன்மையான குடும்பக்கட்டுப்பாடு முறை ஒன்று உண்டு. இது நம்மில் பலபேருக்கு தெரியாது. விஞ்ஞானம் அவற்றை எல்லாம் மறைத்தாலும் அவை கொடுக்கும் பிரச்சினைகளுக்கு பிறகு இறைவனின் கட்டளைகளுக்கு முன் விஞ்ஞானம் கீழ் தான் என்று நிரூபணம் ஆகிறது. ஒரு பெண் குழந்தை பெற்று ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தன் கணவனிடம் உடலுறவு கொள்ளும் பட்சத்தில் அடுத்த ஒரு வருடத்திற்கு முன்பே அவள் இன்னொரு குழந்தைக்கு தாயாகும் வாய்ப்பு இருக்கிறது. இது அந்த குழந்தைக்கும், தாய்க்கும் உகந்ததல்ல. இதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வு என்ன தெரியுமா..? அவள் குழந்தை பெற்ற பிறகு தொடர்ந்து இரண்டு வருடத்திற்கு சிசுவிற்கு பாலூட்ட வேண்டும். அப்படி பாலூட்டும் இந்த 2 வருட காலகட்டத்தில் உடலுறவின் மூலம் குழந்தை உருவாக வாய்ப்பே இல்லை. காரணம், பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு குழந்தையின் கரு உருவாக்கத்தை தடுத்துவிடும். இது இறைவனின் படைப்பில் உள்ள அற்புதம். இதன் மூலம் நன்மையான குடும்பக்கட்டுப்பாட்டிற்கும், சிசுவின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான தாய்ப்பாலுக்கும் வழி ஏற்பட்டுவிடுகிறது. இந்த வழிமுறை 1400 வருடங்களுக்கு முன் இறைவன் அருளிய குரானில் சொல்லப்பட்ட விஷயங்கள். ஆனால், இவை அனைத்தையும் விஞ்ஞானம் இப்போது தான் கண்டுபிடித்து ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருக்கிறது.!!
நன்றி -இதயம்(ஜாபர்)
Sunday, July 29, 2007
இஸ்லாம் மார்க்கம் ஒரு பார்வை-5
இஸ்லாம் சிலை வணக்கத்திற்கு எதிரானது
நீங்கள் அனைவரும் அறிந்தது போல் இஸ்லாம் சிலை வணக்கத்திற்கு எதிரானது. இறைவனின் பெயரைச் சொல்லிக்கொண்டு உயிருள்ள, உயிரற்ற எதையும் கடவுளாக வணங்குவதை இஸ்லாம் கண்டிக்கிறது. இஸ்லாத்தை பொருத்தவரை அதன் கொள்கை "உன்னை படைத்தவனை வணங்கு.. உன்னால், என்னால் படைக்கப்பட்டவைகளை வணங்காதே..!!" என்பது தான். படைக்கப்பட்டவைகள் என்று சொல்லும் போது அது இறைவன் படைத்த மனிதனாகவும் இருக்கலாம், மனிதனால் உண்டாக்கப்பட்ட பொருட்களாகவும் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் இஸ்லாத்தின் மேல் மாற்றுமதத்தவரால் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு என்ன தெரியுமா..? இஸ்லாம் சிலை, உருவங்களை கொண்டு வணங்குவதை தடை செய்திருக்கும் போது முஸ்லீம்கள் மக்காவில் உள்ள கஃபா எனப்படும் ஒரு கட்டிடத்தை நோக்கியே தொழுகை நடத்துவதும், அங்கு சென்று அதன் முன் விழுந்து வணங்குவதும் ஏன்..?ஏன் என்ற காரணத்தை சொல்வதற்கு முன் கஃபா என்பது என்ன என்பதை சொல்லிவிடவேண்டியது அவசியம். அது மட்டுமல்லாமல் அது மற்ற மதத்தவர்க்கு தெரியாமல் பாதுகாக்கப்பட வேண்டிய இரகசியங்கள் ஒன்றும் அங்கு இல்லை. அதைப்போன்ற ஒரு எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டதால் தான் மேலே உள்ளது போன்ற கேள்விகள் வருகின்றன. கஃபா என்பது சதுர வடிவத்தில், சாதாரண ஒரு அறையைப்போன்ற உள் அமைப்பு கொண்ட ஒரு கட்டடம். இது சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லீம்களின் புனித தலங்களில் ஒன்றான மக்கா நகரத்தில் உள்ளது. இந்த சாதாரண கட்டிடத்திற்கு ஏன் இஸ்லாத்தில் இத்தனை முக்கியத்துவம் ஏன் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. கஃபா இறையில்லம் இறைத்தூதர்களான இப்ராஹிம் நபி மற்றும் இஸ்மாயில் நபி ஆகியோர்களால் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டதாக குரான் தெரிவிக்கிறது. இந்த கட்டிடம் தான் இஸ்லாமிய வரலாற்றில் இறைவனை வணங்க இறைத்தூதர்களால் எழுப்பப்பட்ட முதல் பள்ளி (மசூதி) என்பதால் தான் இதற்கு இத்தனை சிறப்பும். இது முஸ்லீம்களால் இறைவனின் இல்லம் எனப்படுகிறது. பொதுவாக தொழுகைக்கு பயன்படும் பள்ளிகள் அனைத்தும் இறையில்லம் என்று தான் இஸ்லாத்தில் சொல்லப்படுகிறது. காரணம், அங்கு கடவுளை வணங்குதலை தவிர மற்ற காரணங்களுக்கு பயன்படுத்துதல் கிடையாது என்பதால். இருந்தாலும் மேற்சொன்ன பல சிறப்புகளால் கஃபா மற்ற பள்ளிகளை காட்டிலும் அதிக பெருமைக்குரியது உண்மை. இந்த பள்ளி இருக்கும் திசையில் உலக முஸ்லீம்கள் அனைவரும் தொழுது இறைவனை வணங்குகிறார்கள். இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். முஸ்லீம்கள் தங்கள் தொழுகையின் போது கஃபாவை முன்னோக்கி நின்று தொழுகிறார்களே தவிர கஃபாவை வணங்குவதில்லை. காரணம், முஸ்லீம்கள் இறைவனைத்தவிர வேறு எதையும் வணங்கக்கூடாது என்பது அடிப்படை தத்துவம். திசை பார்த்து கஃபாவை தொழுவது பற்றி குரான் வசனம் 2:144 சொல்கிறது. அதெல்லாம் சரி தான். அதென்ன ஒரே திசையை நோக்கி நின்று தான் தொழ வேண்டும் என்ற கட்டாயம் ஏன்..?
அடிப்படையில் இஸ்லாம் சமத்துவத்தை, ஒற்றுமையை, சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது. இஸ்லாத்தில் இவற்றை கண்கூடாக காணவேண்டுமென்றால் முஸ்லீம்களின் வணக்கத்தலமான மசூதிக்கு சென்று பார்த்தால் தெரியும். அவர்கள் அங்கு போகும் போதும் சரி, வணங்கும் போதும் சரி, வணங்கி முடிந்து வரும் போதும் சரி மேற்சொன்ன விஷயங்கள் நிறைந்திருக்கும். எத்தனை பெரிய சிறிய, ஏழை பணக்காரன் மசூதிக்குள் போனாலும் அவர்கள் அனைவரும் தோளோடு தோள் சேர்த்து நின்று தான் வணங்க வேண்டும். யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு முன்வரிசை கிடைக்கும். கடைசியில் வருகிறவன் அரசனாக இருந்தாலும் அவன் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும். அதே போல் தொழுகை யாருக்காகவும் காத்திருந்து தொடங்குதல் இருக்காது. சரியான நேரத்தில் தொழுகை துவங்கும். இப்படி சமத்துவம், சகோதரத்துவம் கற்றுக்கொடுக்கும் இஸ்லாம் அது குலையாமல் இருக்க சொல்லிக்கொடுத்த மற்றொரு வழி தான் கஃபாவை நோக்கி தொழுதல் என்பது. இந்த நிபந்தனை இங்கு இல்லை என்றால் அவரவர் இஷ்டத்திற்கு தன் திசையை மாற்றி தொழ தொடங்குவார்கள். இது பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். சிலர் தொழ சிறந்ததாக ஒரு குறிப்பிட்ட திசையை சொல்வார்கள். மற்றவர்கள் அதை மறுப்பார்கள். அதனால் கருத்துவேறுபாடு வரும். அது கலகமாக மாறும். அதுமட்டுமில்லாமல் மூடநம்பிக்கையை வளர்க்கவும் இது உதவும். சிலர் சொல்வார்கள் எனக்கு தெற்கு தான் ராசியானது என்பதால் அந்த திசையில் தொழுகை வேண்டும் என்று சொன்னால், பலரும் பலவாறு மூடநம்பிக்கையை ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கெல்லாம் சேர்த்து இஸ்லாம் அடித்த சம்மட்டி அடி தான் கஃபாவை நோக்கி தான் தொழ வேண்டும் என்பது. இதனால் யாதொரு கருத்துவேறுபாடுமின்றி முஸ்லீம்களால் தொழ முடிகிறது. முஸ்லீம்கள் தான் உலகின் முதல் வரைபடத்தை உருவாக்கினார்கள். அவர்கள் முதலில் வரைபடத்தில் தெற்கு திசையை கீழ்நோக்கியும், வடக்கு திசையை மேல்நோக்கியும் இருக்குமாறு வரைந்தார்கள். அப்போது கஃபா அந்த வரைபடத்தில் உலகின் நடுநாயகமாக இருந்தது. அதன் பிறகு வந்த மேற்கத்திய அறிஞர்கள் உலக வரைபடத்தை வரைந்த போது முன்பு இருந்ததற்கு நேர் எதிராக அதாவது தென் திசை மேலேயும், வடதிசை கீழேயும் வரைந்தார்கள். அப்போதும் கஃபா உலகின் மையத்திலேயே இருந்தது..!! முஸ்லீம்கள் மஸ்ஜித் ஹரம் எனப்படும் மக்காவின் அந்த பள்ளிக்கு சென்றால் கஃபாவை சுற்றி வலம் வருவார்கள். அதுவும் அந்த கட்டிடத்தை வழிபட அல்ல. மனித குலம் ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்துவிதமாக தான் அதை செய்கிறார்கள். ஒருவர் ஒரு முறை வலம் வந்தால் அங்கு ஒரு நடுப்பகுதி இருப்பது போல் இறைவனும் ஒருவனே என்பது தான் அதன் அர்த்தம். கஃபா என்ற அந்த பள்ளி வணங்கப்படுகிறது என்றால் அதன் மேல் நம் கால் படுவதை அனுமதிக்க மாட்டோம் (சிலைகளின் மீது கால் படுவதை நாம் அனுமதிப்போமா..?). ஆனால், அந்த நவீன வசதிகள் இல்லாத நபிகளின் காலத்தில் அனைவரையும் தொழுகைக்கு அழைக்க சொல்லப்படும் "பாங்கு" எனப்படும் தொழுகை அழைப்பு கஃபாவின் மேல் நின்று தான் அழைக்கப்பட்டது. இப்போதும் கூட அதன் மேல் உள்ள துணியை மாற்றும் போதும் மனிதர்களின் கால்கள் அதன் மேல் பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இப்போது சொல்லுங்களேன், கஃபா முஸ்லீம்களால் வணங்கப்படுகிறதா..?

இஸ்லாம் மார்க்கம் ஒரு பார்வை-4
786???
இஸ்லாத்தில் 786 என்ற எண் நிறைய சம்பந்தப்பட்டிருக்கிறது. 786 என்றால் என்ன, அதை பயன்படுத்துவதன் காரணம் என்ன..? இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாத்தில் சொல்லப்படாத விஷயங்களைக் கொண்டு நடத்தப்படும் கேலிக்கூத்துக்களில் இதுவும் ஒன்று. பொதுவாக ஒருவனை முஸ்லீம் என்று குறிக்கக் கூட இந்த எண்ணை பயன்படுத்துகிறார்கள். இன்றும் முஸ்லீம்கள் தங்கள் வீடுகளில், வாகனங்களில், கடிதம் போன்றவை எழுதும் போது கூட இந்த 786 என்ற எண்ணை அது என்ன என்று அறியாமலேயே பயன்படுத்துகிறார்கள். முஸ்லீம்கள் தான் இப்படி என்றால் மாற்று மதங்களிலும் கூட இதன் அர்த்தம் தெரியாமல் நிறைய விஷயங்களில் பயன்படுத்துகிறார்கள். திரைப்படங்களில் கூட கதாநாயகன் முஸ்லீம்களின் தோழன் என்பது போல் காட்ட அவர் போட்டிருக்கும் டாலரில், வைத்திருக்கும் உழைப்பாளர் தகடில், அணிந்திருக்கும் கைதி உடையில் 786 வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல் இந்தியாவில் முஸ்லீம்கள் இஸ்லாத்தை தழுவிய பிறகு தன் தாய் மதத்தில் இருந்த சில சடங்குகளை அவர்கள் அறியாமலேயே வேறு வடிவங்களில் செய்து நடைமுறைப்படுத்தி வந்தனர். உதா.தாலி - கருகமணிசிலை வழிபாடு - தர்ஹா வழிபாடு போன்றவை சொல்லலாம்.அதைப்போல ஒரு தாக்கம் தான் இதுவும். உதாரணத்திற்கு இந்து நண்பர்கள் தாளில் எதுவும் எழுதத்தொடங்கும் போது உ என்று பிள்ளையார் சுழியோ, ஓம் என்றோ, முருகன் துணை, சிவமயம் என்று தங்கள் இஷ்டதெய்வங்களுக்கு தகுந்தவாறு இடுவார்கள். இதை தொடர்ந்த கிறிஸ்துவ நண்பர்களும் + என்ற சிலுவை குறியையோ, ஏசு துணை போன்றோ செய்வார்கள். இதையெல்லாம் பார்த்து காப்பியடித்து செய்த விஷயம் தான் முஸ்லீம்களின் 786 என்ற எண். அது சரி, இத்தனை எண் இருக்கும் போது அதென்ன குறிப்பாக 786 என்று கேட்கிறீர்களா..? விஷயம் இருக்கிறது.முஸ்லீம்கள் எந்த செயலை தொடங்கினாலும் இறைவனின் நினைவுடன், அவன் மேல் வைத்த நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும் என்பது நபிகளார் சொல்லிக்கொடுத்த வழி முறை. எனவே செயலை தொடங்கும் முன் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் என்று தொடங்குவது வழக்கம். இதன் பொருள் எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன் என்பதாகும். இதையே சோம்பல் பட்டு சுருக்கமாக பிஸ்மில்லாஹ் என்று சொல்வது பிறகு வழக்கமானது. நம்முடைய முஸ்லீம் சோம்பேறி மனிதர்கள் அதையும் முழுதாக சொல்லாமல் இன்னும் சுருக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தார்கள். அரபி மொழியில் உள்ள அடிப்படை எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் மதிப்பு உள்ளது. உதாரணத்திற்கு முதல் எழுத்தான 1 என்ற வடிவில் உள்ள அலீஃப் என்ற எழுத்திற்கு எண் மதிப்பு ஒன்று. இப்படி பிஸ்மில்லஹிர்ரஹ்மானிர்ரஹிம் என்ற வாக்கியத்தில் வரும் எல்லா எழுத்துக்களின் எண் மதிப்பையும் கூட்டிய போது கிடைத்தது தான் இந்த 786. ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறதா..? அதான் உண்மை. ஒரு வார்த்தையை ஒழுங்காக சொல்ல தயங்கிய சோம்பேறிகள் உண்டு பண்ணிய எண் தான் 786. சரி.. இப்படி செய்வது சரியா..?நிச்சயமாக சரியில்லை. நம்மை படைத்து, அருள்பாலித்து வணங்கும் இறைவனை ஒரு முழு வாக்கியம் கொண்டு நினைவில் கொள்ள முடியாதவன் எப்படி ஐவேளை தொழுகை செய்து நினைக்க முடியும்.? நிச்சயம் முடியாது. சரி.. கடவுள் நம்பிக்கையை விடுங்கள். தர்க்க ரீதியாக பேசுவோம். பொதுவாக நம் பக்கம் ரங்கநாதனை ரங்கா என்றும், கோபிகிருஷ்ணனை கோபி என்றும் சுருக்கி செல்லமாக கூப்பிடுவோம். இவரை செல்லமாக இன்னும் சுருக்கி கூப்பிட வேண்டும் என்றால் 786 விஷயம் மாதிரியே அவர் பெயரின் எழுத்துக்களுக்கு எண் மதிப்பு கொடுத்து கூட்டி இறுதியில் வரும் எண்ணை கொண்டு அழைக்க முடியுமா.? உதாரணத்திற்கு என்ன 814 ஊருக்கு போறியா..? எங்கே உன் மகன் 512-ஐ கொஞ்ச நாளா காணோம்..? இதை 325 கிட்ட கொடுத்துடு என்று ஆகிவிடும். இது எந்த வகையில் சரியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் ஒரே எண் பல பேரின் கூட்டுத்தொகையில் வர வாய்ப்புள்ளதால் குழப்பம் தான் மிஞ்சும். இந்த 786 எண்ணின் உபயோகம் இன்றைய காலகட்டத்தில் குறைந்து விட்டது என்றாலும் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருவது மிகப்பெரிய அறிவீனம், அதுவும் இஸ்லாத்திற்கு எதிரான பலவீனம் என்பது தான் உண்மை. இதை படித்த பிறகாவது அப்படி செய்வதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது தான் என் விருப்பம்.

இஸ்லாம் மார்க்கம் ஒரு பார்வை-3
இஸ்லாமிய கால அட்டவணை
உலகில் இரண்டு வகையான கால அட்டவணைகள் (காலண்டர்) உண்டு
. 1. சூரியனை அடிப்படையாகக் கொண்ட Solar Calender
. 2. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட Lunar Calender.
முதலாவது முறை Gregorian என்ற பெயரிலும் இரண்டாவது (Hijri)ஹிஜ்ரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரி என்ற வார்த்தை அரபியில் ஹிஜ்ரத் என்பதிலிருந்து மருவி வந்தது. நபிகள் அவர்களை மக்காவிலிருந்த காஃபிர்கள் (ஓரிறைக்கொள்கைக்கு எதிரானவர்கள்) அவருக்கு எதிராக ஒன்றினைந்து தாக்க வந்த போது, அவர்களிடமிருந்து தப்பி மதினாவிற்கு இடம்பெயர்ந்தது இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரத் எனப்படுகிறது (அதன் பிறகு படை திரட்டி வந்து மக்காவை நபிகள் கைப்பற்றியது பழைய கதை). அரபி மொழியில் ஹிஜ்ரத் என்றால் இடம்பெயர்தல் என்று பொருள். அந்த இடம்பெயர்ந்த காலகட்டமான கி.பி 622 ஆண்டில் இருந்து இஸ்லாமிய காலண்டர் தொடங்குகிறது. இந்த காலண்டரை உருவாக்கியது நபிகளார் என்றாலும் அது முறையாக வடிவமைக்கப்பட்டு, கணக்கிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது கி.பி.638 ஆம் ஆண்டு தான். இதை முறையாக செய்து வெளியிட்டவர் நபிகளாரின் உற்ற தோழரும், இரண்டாவது கலீஃபாவுமாகிய உமர் இப்ன் அல்-கதாப்(கிபி 592-644) அவர்கள். இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் முறை மேற்கத்திய நாட்டினரால் A.H (Anno Hegirae) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஒரு நாள் தொடங்குவது என்பது சூரிய உதயத்திலிருந்து கணக்கிடப்படும். ஆனால், இஸ்லாமிய கணக்கீட்டின் படி ஒரு நாள் தொடக்கம் என்பது சந்திர உதயத்தில் இருந்து கணக்கிடப்பட்டு அந்த சந்திரன் மறைந்து மீண்டும் தோன்றுவது ஒரு நாள் எனப்படுகிறது. வழக்கத்தில் உள்ளது போலவே இஸ்லாமிய காலண்டரிலும் 12 மாதங்கள் உண்டு என்றாலும் அவைகள் கொண்ட நாட்களில் தான் வேறு பாடு காணப்படுகிறது.
மாதங்களின் பட்டியலும், அவை கொண்ட நாட்களும் கீழே:
1. முஹரம் (30 நாட்கள்)
2. சஃபர் (29 நாட்கள்)
3. ரபியுல் அவ்வல் (30 நாட்கள்)
4. ரபியுல் ஆஹிர் (29 நாட்கள்)
5. ஜுமாதுல் அவ்வல் (30 நாட்கள்)
6. ஜுமாதுல் ஆஹிர் (29 நாட்கள்)
7. ரஜப் (30 நாட்கள்)
8. ஷபான் (29 நாட்கள்)
9. ரமதான் (30 நாட்கள்)
10. ஷவ்வால் (29 நாட்கள்)
11. துல்கைதா (30 நாட்கள்)
12. துல்ஹஜ் (29 நாட்கள்)

இஸ்லாம் மார்க்கம் ஒரு பார்வை-2
இஸ்லாம் சொல்லும் திருமணம் என்றால் என்ன?
பொதுவாக திருமணம் என்பது ஒரு ஆணும், பெண்ணும் உள்ளம், உடலால் இணைந்து வாழ ஏற்படுத்தப்பட்ட ஒரு சடங்கு என்று தான் நாம் அறிந்து வைத்திருக்கும். ஆனால், இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது இரு தரப்பினரின் சம்பந்தத்துடன் செய்யப்படும் ஒரு கண்ணியத்திற்குரிய வாழ்வியல் ஒப்பந்தம். இந்தியாவைப் பொறுத்தவரையில் முஸ்லீம்களுக்கான தனி திருமணச்சட்டங்கள் இருக்கின்றன. அது முஸ்லீம்களின் நடைமுறைகளில் என்றும் தலையிட்டதில்லை. மதச்சார்பின்மையை இதன் மூலமும் இந்தியா நிரூபிக்கிறது. இஸ்லாமிய திருமணத்திற்கு மணமக்கள் சம்மதம், இரு வீட்டார் ஒப்புதல், சாட்சிகள், ஜமாத்தார்கள் எனப்படும் ஊர் பொதுமக்கள் மிக மிக அவசியம். குறிப்பாக பெண் தரப்பில் பெண்ணின் தந்தை, சகோதரர்கள் அல்லது அதற்கு சமமான பாதுகாவலர்களின் ஒப்புதல் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவர்கள் இல்லாத திருமணம் செல்லாது. இந்த முறை மூலம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கைவிடும் சில காவாலிகளிலிடமிருந்து பெண்ணிணம் காப்பாற்றப்படுகிறது. திருமணத்தின் போது மணமக்கள் இருவரின் சம்மதம் வாய்மொழியாக கேட்கப்பட்டு, அது பதிவுசெய்யப்பட்டு கையெழுத்தும் வாங்கப்படுகிறது. பொதுவாக இஸ்லாத்தில் காதல் (!!) மணமென்பது மிகவும் குறைவு. காரணம், காதல் என்ற பெயரில் காம களியாட்டங்கள் நிகழ்த்தி, அதன் விளைவாக கர்ப்பமாக்கி அந்த பெண்ணை கைவிடுவது என்பது சகஜமான ஒன்று. ஆனால், இஸ்லாம் காதலுக்கு எதிரியில்லை. உடல் உணர்ச்சியை அடிப்படையாக கொண்டு கொள்ளப்படும் அன்பை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. உதாரணத்திற்கு பருவமடைந்த ஒரு பெண் வேற்று ஆணை தனிமையை சந்திக்கக்கூடாது. அப்படி சந்திக்கும் போது அங்கு 3 பேர் இருப்பார்கள். 1. ஆண் 2. பெண். 3. அவர்களை தவறு செய்ய வைத்து வழி கெடுக்க தூண்டும் ஷைத்தான். ஒரு பெண்ணை மணக்க தேர்ந்தெடுக்கும் போது இஸ்லாம் சொல்லித்தரும் வழி. 1. இறைவனின் மார்க்கத்தில் சிறந்தவள் 2. ஒழுக்கத்தில் சிறந்தவள் 3. குடும்ப பாரம்பரியத்தில் சிறந்தவள் 4. கல்வியில் சிறந்தவள் 5. அழகில் சிறந்தவள், 6. செல்வத்தில் சிறந்தவள். இஸ்லாம் பணத்திற்கு கடைசி இடத்தை கொடுக்கிறது. தனக்கான இணையை தேர்ந்தெடுக்கவும், நிராகரிக்கவும் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் உரிமை வழங்கப்படுகிறது.
இஸ்லாத்தில் எத்தனை திருமணம் செய்யலாம்..?
இஸ்லாத்தின் சட்டப்படி ஒரு ஆண் 4 திருமணம் வரை செய்யலாம். உடனே புருவமுயர்த்தி இதென்ன அநியாயம் என்காதீர்கள். பொறுமை..!! இந்த கட்டளை இறைவனிடமிருந்து வந்த காலகட்டம் என்ன தெரியுமா? அறியாமையும், விஞ்ஞானமும் இல்லாத காலகட்டம். போர், கொள்ளை நோய் என்று மனித உயிர்கள் மாய்ந்த நேரம். அதில் குறிப்பாக போர்களில் ஆண்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டார்கள். அவர்கள் வாழ வழியில்லாமல் வறுமையால் பீடிக்கப்பட்டு விபசாரத்தொழிலுக்கு தள்ளப்படும் நிலை நிலவியது. அப்போது ஏற்பட்டது தான் இந்த சட்டம். அது மட்டுமல்ல, ஒரு ஆண் மணமடைந்து அவன் மனைவியோடு திருப்தியில்லாத பட்சத்தில் அவளை பிரிந்தால் காலம் முழுக்க அவன் தனிமையிலும், உடல் ஆசை இல்லாமலும் வாழ முடியுமா..? நிச்சயம் முடியாது. அவனும் விபசாரியைத் தேடி தான் போவான். உலக மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உலகில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை கூடுதல். இது இயற்கை. இந்த நிலை காலம், செல்ல செல்ல பெண்ணுக்கு கணவன் கிடைக்காத நிலையை உண்டாக்கும். இல்லறத்திற்கு வழி இல்லாத பெண்கள் பிழைக்க அவர்களும் விபசாரம் செய்ய வாய்ப்பு உண்டு. இப்படி எல்லாவற்றுக்கும் தீர்வாக இருப்பது தான் பலதார மணம். சரி.. அப்படியானால் ஆண் இஷ்டப்பட்டபடி 4 பெண்களை மணக்கலாமா..? அதான் நடக்காது. அதற்கென்று மிக கடுமையான நிபந்தனைகள் இருக்கின்றன. அதில் முதல் நிபந்தனை என்னவென்றால் முதல் மனைவியின் மனப்பூர்வ சம்மதம் வேண்டும். இப்போது சொல்லுங்கள். கிடைக்குமா..? ஆனால், அந்த காலத்தில் கிடைத்தது. அரேபியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மணம் புரிந்தார்கள். எப்படி சாத்தியம் தெரியுமா..? திருமணம் பற்றி இஸ்லாம் சொன்னதை கடை பிடித்தார்கள். இஸ்லாம் சொல்கிறது, யார் ஒருவர் ஒன்று மேற்பட்ட திருமணம் செய்யப்போகிறாரோ, அவர் தங்கள் மனைவிகளுக்குள் எல்லா வகையிலும் நியாயமாக சமமாக அவர்களை நடத்த வேண்டும். அதை செயல்படுத்த இயலாதவர்களுக்கு அது அனுமதி இல்லை. அதே போல் நடந்தார்கள், திருமணமும் செய்தார்கள். இல்லையென்றால் ஒரு மனைவியை வைத்துக்கொண்டே இத்தனை அல்லல்படும் நாம், இன்னொரு திருமணத்தை நினைப்பது எளிதா..? பெண்கள் தன் கணவனை இன்னொரு திருமணம் செய்ய சம்மதிக்க பல காரணம் இருந்தன. கணவனின் சமமாக நடத்தும் குணம், அவன் மீது கொண்டு அதீத அன்பு, குழந்தையின்மை, நோய், முதுமை அல்லது இயலாமை காரணமாக இருந்தது. இந்த கடைசி 3 பிரச்சினைகள் இருந்தால் நாம் எடுக்கும் நடவடிக்கை விவாகரத்தாக இருக்கும். அதன் மூலம் அந்த பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு அவனும் தன் நிம்மதி இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு இஸ்லாம் சொன்னதை விட சரியான தீர்வு வேறு எதுவும் உண்டா..?இதென்ன அநியாயம்..? ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்யலாம், பெண்கள் செய்யக்கூடாதா? என்ற கேள்வி வரும். அதற்கும் இஸ்லாத்தில் பதில் உண்டு. இஸ்லாத்தில் ஆண் பெண் உடற்கூறுகளை வைத்து சில விஷயங்களை நன்மைக்காக கற்பிக்கிறதே தவிர உறவில், உரிமையில், நடத்தப்படுவதில் இரு பாலாரும் சமமே. இன்னும் சொல்லப்போனால், இஸ்லாம் பெண்களை மிகவும் மேன்மைப்படுத்துகிறது. சரி.. நான் கேள்விக்கு வருகிறேன். ஆண்களைப் போலவே பெண்களும் இன்னொரு ஆணை மணம் செய்ய உரிமை உண்டு. ஆனால், நிபந்தனை இன்னொருவனுக்கு மனைவியாக இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு கணவன் கொடுமையால் விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள், வஞ்சிக்கப்பட்டவர்கள் தாராளமாக மறுமணம் செய்யலாம். அப்படி திருமணம் செய்பவர்களை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது. இதற்கு சிறந்த உதாரணம் நபிகள். அவர் ஒரு விதவையைத்தான் மணம் புரிந்தார். அது ஏன் பெண்ணுக்கு இந்த நிபந்தனை என்று கேட்கலாம். இஸ்லாம் காரணகாரியமில்லாமல் எதையும் சொல்வதில்லை. உதாரணத்திற்கு மனிதனுக்கு தாய், தந்தை உறவும், அவர்கள் மூலம் கிடைக்கும் கௌரவம், மரியாதை, சொத்துக்கள் மிகவும் இன்றியமையாதது. ஒரு அனாதைக்கு, தவறான வழியில் பிறந்த குழந்தைக்கு இந்த உலகத்தில் கிடைக்கும் மரியாதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஒரு ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்கள் மூலம் குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகள் எல்லோருக்கும் அவன் ஒருவன் தந்தை என்பது மிகவும் தெளிவாக தெரியும். அதன் மூலம் உரிமையும், சொத்துக்களும் எல்லோருக்கும் சமமாக பங்கிட முடியும். இதுவே, ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவன்கள் இருந்து அவளுக்கு பல குழந்தைகள் இருந்தால் எந்த கணவனுக்கு பிறந்த குழந்தை என்று அவர்களை இனம் காண முடியுமா..? கணவன்கள் ஒருவொருக்கொருவர் விலகிசெல்ல வாய்ப்புண்டு. அதுமட்டுமல்ல, இதனால் பல வழிகளில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நியாயமான முடிவும் எடுக்க முடியாது.
ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருப்பதை இஸ்லாம் தடை செய்வதின் விஞ்ஞான நோக்கத்தை காண்போம். அறிவியல் கண்டுபிடிப்பின் படி எயிட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்களுக்கான ஊற்றுக்கண்ணாக இருப்பது முறைகேடான உறவு என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதாவது மனைவி அல்லாது இன்னொரு பெண்ணுடன் உறவு கொள்ளுதல். அந்த பெண்ணும் இன்னும் பல ஆணுடன் உறவு வைத்திருப்பாள் என்பது சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இந்த நிலை பாலியல் நோயை ஏற்படுத்தும் பட்சத்தில் பலரிடம் உறவு கொள்ளும் விபசாரிக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களிடம் உறவு கொள்ளும் மனைவிக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது. அவர்கள் செய்வது சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது என்றாலும் கூட நடைமுறையில் ஒத்துவராத விஷயமிது. காரணம், அவர்கள் உடல் ரீதியாகவே அப்படிப்பட்ட நிலையை பெற்றுள்ளார்கள். அது மட்டுமல்ல, அவனே அவனுக்கென்று கிளி மாதிரி மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி சின்னவீடு வைத்துக்கொள்ளும் இந்த உலகத்தில் ஒன்று மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரே ஒரு மனைவியின் மீது மற்ற கணவர்களுக்கு அன்பும், காதலும், ஈடுபாடும் இருக்காது. அவன் மனைவியை விடுத்து பிற பெண்களிடம் உறவு கொண்டு அவன் பாலியல் நோயை பெற்று அதை அவன் மனைவிக்கு கொடுத்து, அவள் மற்ற கணவர்களுக்கு கொடுத்து, மற்ற கணவர்கள் உறவு கொள்ளும் மற்ற பெண்களுக்கு கொடுத்து இந்த நோய் பரவி உலகமே பாலியல் நோயால் பீடிக்கப்படும். ஆனால், ஒரே கணவரிடம் உறவு கொள்ளும் பெண்களுக்கு இந்த அபாயம் இல்லை. அதுமட்டுமல்லாமல், ஒரே ஒரு மனைவி இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கே உரிய அதிகாரம், ஆளுமை குணம் கணவர்களுக்குள் போட்டி பொறாமையை ஏற்படுத்தி, பிரச்சினையை பெரிதாக்கி அதனால் ஏற்படும் விளைவு மிக மோசமானதாக இருக்கும். சரி.. அப்படியானால் இதன் மூலம் இஸ்லாம் பலதார மணம் செய்ய எல்லோரையும் ஊக்கப்படுத்துகிறதா..? நிச்சயம் இல்லை. ஒரு பிரச்சினையின் தீர்வாக விவாகரத்து, அதனால் பெண்ணின் வாழ்க்கை இழப்பு, விபசாரம், நோய் என்று போகாமல் சுமுகமாக, சுகமாக வாழ இஸ்லாம் சொல்லித்தரும் வழி இது. இஸ்லாத்தில் இந்ததபல தார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து இவ்வளவு விமர்சிக்கப்படுகிறதே.. நீங்களே சொல்லுங்கள். இந்தியாவின் மக்கள் தொகை தொகையில் எல்லா மதத்தினரின் சதவீதத்தில் பல தார மணம் செய்த முஸ்லீம்களின் சதவீதம் எவ்வளவு..? மற்ற மதத்தினரைவிட குறைவாக இருப்பார்கள். காரணம், கடுமையான நிபந்தனைகளும், வழி முறைகளும். அது மட்டுமல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி என்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. அதற்கான மன பலம், உடல்பலம், பொருள் பலம் அவசியம் வேண்டும். நமக்கு ஒரு மனைவியுடன் வாழ்க்கை தள்ளுவதற்கே நாக்கு தள்ளுகிறது..!! நம் முதல்வருக்கு 2 மனைவிகள். ஆனால், அவர் முஸ்லீம் இல்லை. அவரை சமுதாயம் ஒதுக்கவில்லை. அவர்களுக்குள் பிரச்சினையும் இல்லை. எனக்கு ஒரே ஒரு மனைவி தான். என்னால் பலதார மணத்தை என் விஷயத்தில் ஏற்கமுடியாது. ஏனென்றால் அதற்கான காரணகாரியங்கள் எங்கள் இருவருக்கும் இல்லாததால் அதன் அவசியம் இல்லை. அவசியம் உள்ளவர்கள் தீர்விற்காக அதை செய்வதில் தவறில்லை. அது வழிகெட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைக்காட்டிலும் பல மடங்கு சிறந்தது. கடைசியாக, பலதார மணத்தின் அவசியத்தை நிர்ணயிப்பவை நம் மதமல்ல. அவற்றை சம்பந்தப்பட்டவர்களின் தேவை, புரிதல், அனுசரித்தல், பகிர்தல் ஆகியவை தான் நிர்ணயிக்கின்றன.

இஸ்லாம் மார்க்கம் ஒரு பார்வை-1
அல்லாஹ் என்றால் என்ன..? அது யார்..??
நம்மில் பலரிடையே அல்லாஹ் என்றால் முஸ்லீம் கடவுள் என்ற எண்ணம் இருக்கிறது. அவர்கள் அப்படி சொல்லும் போது நான் அதை நகைச்சுவையாக எண்ணி சிரிப்பேன். எப்படி ஆங்கிலத்தில் கடவுளை காட் (God) என்றும், தமிழில் இறைவன், கடவுள் என்கிறோமோ அதே போல் அரபு மொழியில் அல்லாஹ் என்றால் இறைவன், கடவுள் என்று பொருள். சில நண்பர்கள் என்னிடம் "நமக்குள் ஒரே வித்தியாசம் தான். நீங்கள் அல்லாஹ்வை வணங்குகிறீர்கள், நாங்கள் கடவுளை வணங்குகிறோம்" என்பார்கள். ஆக, அவர்கள் சொல்வது போல் அல்லாஹ், கடவுள் என்ற பெயர் தானே வேறே தவிர மற்றபடி அர்த்தமும், ஆண்டவனும் ஒன்று தான். ஒரு ஊருக்கு பல வழிகள் இருக்கலாம். ஆனால், நாம் சென்று அடையும் போது அது ஒரே ஊர் தான்.
இறைவன் எப்படிப்பட்டவன்?
இந்த இறைவன் தான் இந்த உலகத்தை படைத்து, அதில் அனைத்து ஜீவராசிகளையும் படைத்து அருள்பாலிப்பவன். அவன் ஒருவன். தனித்தவன். அவனுக்கு ஈடு இணை கிடையாது. அவன் ஆணுமில்லை, பெண்ணுமில்லை (நம் கலாச்சாரத்தில் சமுதாயத்தில் புத்திகூர்மை, உழைப்பு, வலிமை என்று சிறப்பு குணங்கள் ஆணுக்கே என்று நினைப்பதால் பேச்சிலும், எழுத்திலும் இறைவனை ஆண்பாலில் குறிக்கிறோம்). அவனுக்கு வாரிசுகள் கிடையாது. அவனுக்கு பசி, தூக்கம், பலவீனங்கள், பிறப்பு, இறப்பு, தேவைகள் எதுவும் கிடையாது. அவன் ஒரு அளவிடமுடியாத மகா சக்தி. அவன் சக்திக்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால் சொல்லி வைத்தது போல் அததன் வேலையை சரியாக செய்யும் பூமி, சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரம் போன்ற எல்லாமே சொல்லலாம்.
மசூதி என்றால் என்ன..?
அரபு மொழியில் மஸ்ஜித் என்றால் இறைவனை வழிபடும் தலம் என்று பொருள். அதுவே தமிழில் பள்ளிவாசல், பள்ளிவாயில், மசூதி என்று அழைக்கப்படுகிறது. ஓரிறையை மட்டும் மனதில் நம்பிக்கை வைத்தவர்கள் சென்று இறைவனை வழிபடும் இடம் இது. முஸ்லீம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஐவேளை தொழுகையை நிறைவேற்ற இங்கு தான் செல்வார்கள். இந்த மசூதிக்குள் யார் வேண்டுமானாலும் நுழையலாம், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் உண்டு. அவன் ஓரிறையை மட்டும் வணங்க வேண்டும். மற்றபடி சாதி, மொழி, இனம் போன்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு இங்கு வேலை இல்லை. மனித சமூகத்தின் சமத்துவத்தை நீங்கள் நேரில் காணவேண்டுமானால் முஸ்லீம்களின் தொழுகையின் போது காண வேண்டும். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை கொண்ட எல்லா மனிதர்களும் எந்த ஒரு பாகுபாடின்றி தோளோடு தோள் சேர்ந்து நிற்கும் போது அங்கு நெஞ்சை நிமிர்த்தி நிற்பது முஸ்லீம்கள் மட்டுல்ல, மானிட சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு சாவு மணி அடிக்கும் மானுடமும் தான்!!

Saturday, July 28, 2007
தர்மம் செய்ய வேண்டும்
அல்லாஹ்வுடைய பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் யாரேனும் தர்மம் செய்தால் அதன் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவது உறுதியாகி விட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி நூல் : அஹ்மத் 22235)

நற்குணத்துடன் நடந்து கொள்ள வேண்டும்
(سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ فَقَالَ الْفَمُ وَالْفَرْجُ )
எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக சொர்க்கத்தில் நுழைவார்கள் என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு பயப்படுவதாலும் நற்குணத்தாலும் என்று பதிலளித்தார்கள். எந்தச் செயலின் காரணத்தால் அதிகமாக மக்கள் நரகத்தில் நுழைவார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், வாய் மற்றும் இச்சை உறுப்பின் காரணத்தால்! என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதீ 1927)
( أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ )
உரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும,; நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஉமாமா -ரலி, நூல் : அபூதாவூத் 4167)

Subscribe to:
Posts (Atom)