இஸ்லாமிய கால அட்டவணை
உலகில் இரண்டு வகையான கால அட்டவணைகள் (காலண்டர்) உண்டு
. 1. சூரியனை அடிப்படையாகக் கொண்ட Solar Calender
. 2. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட Lunar Calender.
முதலாவது முறை Gregorian என்ற பெயரிலும் இரண்டாவது (Hijri)ஹிஜ்ரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரி என்ற வார்த்தை அரபியில் ஹிஜ்ரத் என்பதிலிருந்து மருவி வந்தது. நபிகள் அவர்களை மக்காவிலிருந்த காஃபிர்கள் (ஓரிறைக்கொள்கைக்கு எதிரானவர்கள்) அவருக்கு எதிராக ஒன்றினைந்து தாக்க வந்த போது, அவர்களிடமிருந்து தப்பி மதினாவிற்கு இடம்பெயர்ந்தது இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரத் எனப்படுகிறது (அதன் பிறகு படை திரட்டி வந்து மக்காவை நபிகள் கைப்பற்றியது பழைய கதை). அரபி மொழியில் ஹிஜ்ரத் என்றால் இடம்பெயர்தல் என்று பொருள். அந்த இடம்பெயர்ந்த காலகட்டமான கி.பி 622 ஆண்டில் இருந்து இஸ்லாமிய காலண்டர் தொடங்குகிறது. இந்த காலண்டரை உருவாக்கியது நபிகளார் என்றாலும் அது முறையாக வடிவமைக்கப்பட்டு, கணக்கிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது கி.பி.638 ஆம் ஆண்டு தான். இதை முறையாக செய்து வெளியிட்டவர் நபிகளாரின் உற்ற தோழரும், இரண்டாவது கலீஃபாவுமாகிய உமர் இப்ன் அல்-கதாப்(கிபி 592-644) அவர்கள். இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் முறை மேற்கத்திய நாட்டினரால் A.H (Anno Hegirae) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஒரு நாள் தொடங்குவது என்பது சூரிய உதயத்திலிருந்து கணக்கிடப்படும். ஆனால், இஸ்லாமிய கணக்கீட்டின் படி ஒரு நாள் தொடக்கம் என்பது சந்திர உதயத்தில் இருந்து கணக்கிடப்பட்டு அந்த சந்திரன் மறைந்து மீண்டும் தோன்றுவது ஒரு நாள் எனப்படுகிறது. வழக்கத்தில் உள்ளது போலவே இஸ்லாமிய காலண்டரிலும் 12 மாதங்கள் உண்டு என்றாலும் அவைகள் கொண்ட நாட்களில் தான் வேறு பாடு காணப்படுகிறது.
மாதங்களின் பட்டியலும், அவை கொண்ட நாட்களும் கீழே:
1. முஹரம் (30 நாட்கள்)
2. சஃபர் (29 நாட்கள்)
3. ரபியுல் அவ்வல் (30 நாட்கள்)
4. ரபியுல் ஆஹிர் (29 நாட்கள்)
5. ஜுமாதுல் அவ்வல் (30 நாட்கள்)
6. ஜுமாதுல் ஆஹிர் (29 நாட்கள்)
7. ரஜப் (30 நாட்கள்)
8. ஷபான் (29 நாட்கள்)
9. ரமதான் (30 நாட்கள்)
10. ஷவ்வால் (29 நாட்கள்)
11. துல்கைதா (30 நாட்கள்)
12. துல்ஹஜ் (29 நாட்கள்)
Sunday, July 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment